×

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி 8ம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 8ம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளைய தினம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வளிமண்டல கீழடுக்கு சுழற்சி 8ம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chainai Meteorological Center ,Lower Atmospheric ,Cycle ,Dinakaraan ,
× RELATED புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி